லோகேஷ் கனகராஜின் இணையதள பதிவு தற்பொழுது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.இதற்கிடையில் , இந்த படத்தின் டிரைலர் ஏப்ரல் மாதம் ரிலீசாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
Thanx machi! Likewise! Beast update plz 🔥
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 14, 2022
இந்நிலையில் அஜித் ரசிகர்கள் யாரைப் பார்த்தாலும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டது போல தற்போது விஜய் ரசிகர்களும் பீஸ்ட் அப்டேட் கேட்டு வருகின்றனர். இந்த வகையில் சமீபத்தில் விஜய் ரசிகர்கள் கிரிக்கட் வீரர் ஷமியிடம் பீஸ்ட் அப்டேட் கேட்டது போன்ற வீடியோ வைரலாகி வந்தது.
இவர்களைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜூம் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘பீஸ்ட் அப்டேட் ப்ளீஸ்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது விஜய் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் நெல்சனிடம் உங்களுடைய நெருங்கிய நண்பரை ‘பீஸ்ட் அப்டேட் கேட்டுள்ளார் இப்போதாவது அப்டேட் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.