வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் சுரேஷ் சக்கரவர்த்தி இணைந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் சுரேஷ் சக்ரவர்த்தி. இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வந்த இவர் திடீரென 35-வது நாளிலேயே வெளியேற்றப்பட்டார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பின் சுரேஷ் சக்கரவர்த்தி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
#VasanthaBalansNext #UrbanBoyzProductionNo1
We are happy to announce that our favorite #SureshChakravarthi , @JSKfilmcorp, and #ShahRa are part of our film. They add so much value to our project😄@Vasantabalan1 @UBoyzStudios @iam_arjundas @gvprakash @officialdushara @onlynikil pic.twitter.com/0ogeD3lrfi— Urban Boyz Studios (@UBoyzStudios) August 27, 2021
இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி பிரபல இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் ஜே.எஸ்.கே.சதீஷ் குமார், ஷா ரா ஆகியோரும் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.