தமிழ் சினிமா உலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் செல்வராகவன். இவர் முதல் முறையாக நடிகராக நடித்துள்ள திரைப்படம் சாணிக் காயிதம். இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள சாணிக் காகிதம் திரைப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். முன்னதாக இயக்குனர் இயக்கத்தில் முதல் திரைப்படமாக உருவாகி இன்று உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது ராக்கி திரைப்படம்.
RA ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் மனோஜ் குமார் தயாரித்துள்ள ராக்கி திரைப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா இணைந்து வெளியிட்டுள்ளனர். நடிகர் வசந்த் ரவி மற்றும் இயக்குனர் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, டப்பிங் கலைஞர் ரவீனா ரவி மற்றும் நடிகை ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ராக்கி திரைப்படத்திற்கு, ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசை அமைத்துள்ளார். மேலும் நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதிரடி ஆக்சன் திரைப்படம் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. மேலும் ராக்கி திரைப்படத்திலிருந்து எமோஷனலான புதிய SNEAK PEEK வீடியோ தற்போது வெளியானது. அந்த SNEAK PEEK வீடியோ இதோ..