தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான இயக்குனர் என்று பெயர் பெற்றவர் சங்கர். இவர் தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரனை வைத்து “ராம் சரண் 15” என்று தற்காலிகமாக பெயரிட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதி தாமன் இசையமைகிறார். இப்படத்தில் ராம்சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முன்னணி பல்கலைக்கழகமான வேல்ஸ் நிறுவனம் இயக்குனர் சங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் டாக்டர் பட்டம் பெற இருக்கும் இயக்குனர் சங்கருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.