Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்…. டுவிட்டரில் நெகிழ்ச்சி பதிவு….!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபல இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் ஆன 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நடைபெறுகிறது. இந்த செஸ் போட்டியின் தொடக்க விழா நேற்று சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த போட்டி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில், 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்- விராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் கார்த்தி, உதயநிதி ஸ்டாலின், ஐஸ்வர்யா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியின் தொடக்க விழாவினை இயக்குனர் விக்னேஷ் சிவன இயக்கியிருந்தார். இதன் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விக்னேஷ் சிவனுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் எனக்கு தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு நன்றி. உங்கள் குரலை கேட்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் வருகையினால் நிகழ்ச்சி மிகவும் அழகாக அழகானது என்று பதிவிட்டு இருந்தார். மேலும் பிருந்தா மாஸ்டர் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசர் வீடியோவை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |