பிரபல இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவருடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின் கணவருடன் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று திரும்பிய நடிகை காஜல் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஜாக்பாட், குலேபகாவலி ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ‘கோஸ்ட்டி’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
ஃபேண்டஸி ஹாரர் காமெடி படமாக தயாராகும் இந்த படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, தேவதர்ஷினி, ஸ்ரீமன், கோலமாவு கோகிலா புகழ் டோனி உள்பட 23 காமெடி நடிகர்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் இந்த படத்தில் ஒரு முன்னணி கதாநாயகரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது . தற்போது நடிகை காஜல் அகர்வால் சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ மற்றும் கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.