பிரபல இயக்குனரை ஒருமையில் பேசிய வடிவேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் இயக்குநர் நவீன்.
தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றவர் வடிவேலு. இடையில் சில காரணங்களால் நடிக்காத நிலையில் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இத்திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து உதயநிதியின் மாமன்னன் திரைப்படத்தில் நடிக்கிறார் வடிவேலு. மேலும் நெல்சன் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்தும் நடிக்கிறாராம். அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் நவீன் வடிவேல் பற்றி பேசி இருக்கின்றார். சில ஆண்டுகளுக்கு முன்பாக இம்சை அரசன் 2 படத்தில் வடிவேலு நடிக்க ஒப்பந்தமானார்.
ஆனால் அவருக்கும் படக்குழுவினருக்கு ஏற்பட்ட பிரச்சனையால் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். இதனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான சங்கர் நடிகர் சங்கத்தில் புகார் அளித்து விட்டார். இந்நிலையில் இந்நிகழ்வு பற்றி இயக்குனர் நவீன் பேசி இருக்கின்றார். இம்சை அரசன் திரைப்படத்தின் இயக்குனர் சிம்புதேவனை பற்றி வடிவேலு ஒருமையில் திட்டியுள்ளார். இதற்கு சிம்புதேவனின் உதவி இயக்குனராக பணிபுரிந்த நவீன கண்டனத்தை தெரிவித்து இருக்கின்றார். வடிவேலு பேசியது அகந்தையின் வெளிப்பாடே. யாராக இருந்தாலும் மரியாதை கொடுத்து பேச வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார் நவீன்.