தமிழ் சினிமாவில் 9 திருடர்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அகன்ஷா மோகன். 30 வயதாகும் இவர் மாடல் துறையில் பணியாற்றி வந்தார். சில விளம்பரங்களிலும் இவர் நடித்துள்ளார்.இதை இடையே மும்பையில் உள்ள அந்தேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி வந்த இவர் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .
நேற்று வெகு நேரமாகியும் தனது அறையில் இருந்து இவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவலின் பெயரில் ஓட்டலுக்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் அகன்ஷா பிணமாக பிறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.