Categories
உலக செய்திகள்

பிரபல உணவகத்தில் துப்பாக்கிசூடு…. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…. பீதியில் வாடிக்கையாளர்கள்….!!

மெக்டொனால்டு உணவகத்தில் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில்  2 பேர் உயிரிழந்துள்ளனர்.

நெதர்லாந்து நாட்டில் ஸ்வோல் என்ற நகர்  அமைந்துள்ளது. இந்த நகரில் மெக்டொனால்டு என்ற உணவகம் செயல்பட்டுவருகிறது.  இந்த உணகத்தில் வாடிக்கையாளர்களை போல் இரண்டு பேர் நுழைந்து  உணவை ஆர்டர் செய்து விட்டு மேசையில் அமர்ந்திருந்தனர்.  இதனைத் தொடர்ந்து இவர்கள் எதிர்புறத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்த இருவரை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இந்த தாக்குதலில்  இரண்டு பெரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.  இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கி துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்கள்  2 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.  இந்த  சம்பவத்தினால் உணவகத்தில் இருந்த மற்ற வாடிக்கையாளர்கள் பீதியில் உள்ளனர்.

Categories

Tech |