இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி இன்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி மேடையில் விரிவுரை அளிக்க இருந்த போது திடீரென மர்ம நபர் ஒருவர் அவர் கழுத்தில் கத்தியால் குத்தினார்.
இதனால் நிலைகுலைந்த சல்மான் ருஷ்டி தரையில் விழுந்தார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் கத்தியால் குத்திய நபரை தடுத்து நிறுத்தி பிடித்தனர். இதனை கண்ட பார்வையாளர்களில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அதிர்ச்சி அடைந்து அலறினர். பின்னர் உடனடியாக சல்மான் ருஷ்டி மருத்துவ ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.