Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல கன்னட நடிகர் சதீஷ் வஜ்ரா கொலை…. மைத்துனர் உள்பட 2 பேர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

பிரபல நடிகர் கொலை செய்யப்பட்ட வழக்கில்  2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சதீஷ் வஜ்ரா. இவர் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வந்துள்ளார். இவரின் மனைவி கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சதீஷ் வஜ்ரா வீட்டிற்குள் நுழைந்த சில மர்ம நபர்கள் அவரை கொடூரமான முறையில் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். இவரை குடும்பத்தினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சதீஷ் வஜ்ரா உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சதீஷின் மைத்துனர் சுதர்சன் மற்றும் உறவினர் நாகேந்திரன் உள்ளிட்ட 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது சதீஷ் வஜ்ராவின் மனைவி 7 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டு இறந்து விட்டார்.

இதற்கு காரணம் சதீஸ் வஜ்ரா தான் என்று அவரின் மனைவியின் குடும்பத்தினர் நினைத்து அவரின் மீது கடும் கோபத்தில் இருந்த நிலையில், அவருடைய பெண் குழந்தையையும் மனைவியின் குடும்பத்தினரிடம் சதீஷ் வஜ்ரா ஒப்படைத்துள்ளார். இதன் காரணமாக சதீஷ் வஜ்ராவை கொலை செய்ய வேண்டும் என அவரின் மைத்துனர் சுதர்சன் முடிவு செய்துள்ளார். அதன்படியே சதீஷின் வீட்டிற்குள் நுழைந்து அவரை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |