Categories
மாநில செய்திகள்

பிரபல கன்னட நடிகர் மறைவு… திரையுலகிற்கு பேரிழப்பு… எம்.பி கனிமொழி இரங்கல்!!

கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு திமுக எம்பி. கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் புனித் ராஜ்குமார் இன்று காலை பெங்களூரில் அவருடைய இல்லத்தில் எப்போதும் போல் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, திடீரென்று  அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.

இவருடைய மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவருடைய மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து திமுக எம்பி. கனிமொழி தனது ட்விட்டர் பதிவில் மக்களின் மனம் வென்ற கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு திரையுலகிற்கு பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |