Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல காமெடி நடிகருடன் இணைந்த குக் வித் கோமாளி பவித்ரா… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு… வைரலாகும் புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி பவித்ரா பிரபல காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த போட்டியாளர்களுக்கும் கோமாளிகளுக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு  கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பவித்ராவுக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் பிரபல காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து பவித்ரா நடிக்க உள்ளார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பூஜையில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |