தமிழ் சினிமாவில் உள்ள பெண் காமெடி நடிகைகளில் குறிப்பிடத் தகுந்தவர் மதுமிதா. திரைப்படங்களுக்கு முன்னர் சின்னத்திரைகளில் நடித்த வந்த இவர், சந்தானத்துடன் இணைந்து ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். முன்னதாக மதுமிதா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா எனும் நகைச்சுவை தொடரில் நடித்து வந்தார். அதன் பின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்தார்.
பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து பெரிய திரைக்கு வந்த மதுமிதா, பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாப்பாத்திரம் ஏற்று பிரபலமானார் என்பது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில் நகைச்சுவை நடிகையும், பிக் பாஸ் பிரபலமுமான மதுமிதா, கர்ப்பமாக உள்ளநிலையில், தற்போது சீமந்தம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.