Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரபல கார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபாரம்….. எதற்காக தெரியுமா?…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் வேதாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் உள்ள பிரபல கார் விற்பனை நிறுவனத்திடம் புதிய காருக்கு ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்தார். அதுமட்டுமில்லாமல் தனது பழைய காரை விற்று தர கொடுத்துள்ளார். அந்த பழைய காருக்கு ரூ. 65 ஆயிரம் தருவதாக கார் நிறுவன ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் பல நாட்கள் ஆகியும் புதிய கார் வழங்கப்படவில்லை. மேலும் பணத்தையும் திரும்ப தரவில்லை. இதனையடுத்து உடனடியாக வேதாச்சலம் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதன்பிறகும் உரிய பதில் கிடைக்காதால் மன உளைச்சலுக்கு ஆளான வேதாச்சலம் குமரி மாவட்டம் நுகர்வோர் குறையை தீர ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த குமரி மாவட்ட நுகர்வோர் கோர்ட் தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் பிரபல கார் விற்பனை நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டினர். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வேதாச்சலத்திற்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட முன்பணம் ரூ.11,000, பழைய காரின் விற்பனை விலை ரூ.65 ஆயிரம், நஷ்டஈடு பத்தாயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.3000 என்று ரூ.89 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |