பிரபல கால்பந்து வீரர் ஒருவர் கோபத்தில் செய்த ஒரு காரியம் ஆறு மாத குழந்தையின் உயிரை காப்பாற்றி இருக்கிறது.
கடந்த 2022-ம் ஆண்டு போர்ச்சுகல் மற்றும் செர்பியாவிற்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த மேட்சில் 90 நிமிடங்கள் வரை 2 அணிகளும் 2 ஸ்கோர் எடுத்து ஒரே நிலையில் இருந்தது. அதன்பிறகு ரோனல்டோ அடித்த ஒரு கோல் இலக்கினை சரியாக சென்றடையும். ஆனால் ரெப்ரி அதை ஏற்க மறுத்துள்ளார். இதனால் ரொனால்டோ ரெப்ரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ரெப்ரி ரொனால்டோவுக்கு மஞ்சள் அட்டை கொடுத்து வெளியே அனுப்பிவிடுவார். இதனால் கோபமடைந்த ரொனால்டோ அவருடைய கேப்டன் பேண்டை அரங்கத்தில் தூக்கி வீசி விட்டு சென்று விடுவார்.
அந்த கேப்டன் பேண்டை அரங்கத்தில் வேலை செய்த ஒருவர் எடுத்து 3 நாட்கள் ஏலத்தில் விட்டுள்ளார். அந்த ஏலத்தில் கேப்டன் பேண்டுக்கு மிகப்பெரிய தொகை கிடைத்துள்ளது. அந்த தொகையை செர்பிய நாட்டைச் சேர்ந்த ஸ்பைனல் கார்ட் என்ற நோயால் பாதிக்கப்பட்ட 6 மாத குழந்தையின் மருத்துவ செலவுக்காக கொடுத்துள்ளார். இதனால் அந்த குழந்தை முழுமையாக குணமடைந்து நலமுடன் இருக்கிறது. மேலும் கோபத்தால் செய்த ஒரு காரியம் ஒரு உயிரையே காப்பாற்றி இருக்கிறது.