Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பிரபல கால்பந்து வீரரின் கட்அவுட்…. மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி…. சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்கள்…!!!

தர்மபுரியில் மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் செல்லியம்பட்டி பகுதியில் இருக்கும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இதனையடுத்து முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் கால்பந்து போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மாணவர்களை வரவேற்கும் விதமாக பள்ளி மைதானத்தில் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சியின் உருவப்படம் அடங்கிய கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் பெஞ்சமின், உடற்கல்வி ஆசிரியர் பிரான்சிஸ் மற்றும் பிற ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |