Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரருக்கு 12 மாதம் தடை, அபராதம்…. விநோதமான தீர்ப்பு…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

இந்த வருடம் பாகிஸ்தான் சென்ற இங்கிலாந்து டி20 அணியில் சிறப்பாக செயல்பட்டு சதமடித்த ஜேசன் ராய்-ஐ குஜராத் டைடன்ஸ் அணி ஐபிஎல் மெகா ஏலத்தில் 2 கோடிக்கு வாங்கியது. இந்த நிலையில் ஜேசன் ராய் ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ராய், “நான் பயோ பபுளில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறேன். எனவே ஐபிஎலில் விளையாடினால் பயோ பபுளில் இன்னும் இரண்டு மாதங்கள் வரை இருக்கும் நிலை ஏற்படும். இதனால் மன அழுத்தம் உண்டாகும். அதோடு மட்டுமில்லாமல் பேட்டிங்கில் முழு கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகும்.

அவ்வாறு நடந்தால் அது நான் அணிக்கு துரோகம் செய்தது போல் இருக்கும். எனவே ஐபிஎல் தொடரிலிருந்து நான் விலகுகிறேன்” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், “2,500 பவுண்ஸ்ட்கள் ஜேசன் ராய்க்கு அபராதமாக விதிக்கப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் இரண்டு சர்வதேச போட்டிகளில் அடுத்த 12 மாதங்களுக்கு ஜேசன் ராய் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜேசன் ராய் என்ன தவறு செய்தார் ? என்ற தகவலை ரகசியமாக வைத்துள்ளது.

அதேசமயம் ஜேசன் ராய் நன்னடத்தை காரணமாக அவருக்கு இரண்டு போட்டிகளில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையானது நீக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், “மேலும் ஒரு முக்கிய வீரர் சிறுவயதில் இனவெறி கருத்தை வெளியிட்டிருக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்திருந்தது. இதனால் ரசிகர்கள், இந்த விவகாரம் காரணமாக ஜேசன் ராய் மீது நடவடிக்கை பாய்ந்திருக்குமோ ? என்ற சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |