பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ராட் மார்ஷ் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். 1970 முதல் 19784 வரையிலான காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பராக இருந்த இவர் 96 டெஸ்ட் உட்பட 188 சர்வதேச ஆட்டங்களில் ஆடியுள்ளார்.
விக்கெட் கீப்பராக 479 விக்கெட்டுகளை வீழ்த்தியது அன்றைய சாதனையாக இருந்தது. ஆஸியின் டெனிஸ் லில்லி – ராட் மார்ஷ் ஜோடி உலகின் தலைசிறந்த பவுலர் – கீப்பர் ஜோடியாக பார்க்கப்பட்டது.