உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷேன் வார்னேவின் மரணம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ராட் மார்ஷ் காலமானதற்கு இன்று காலை 7.23 மணிக்கு டுவிட்டரில் மிக உருக்கமான பதிவிட்டிருந்தார் ஷேன் வார்னே.
அடுத்த 12 மணி நேரத்திற்குள் அவருக்கே இரங்கல் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இது வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்துவதாக உள்ளது.