பிரபல பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தீடிரென தான் பெண்ணாக மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஸ்வப்னிஸ் ஷிண்டே என்பவர் பாலிவுட்டின் பிரபல ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். மேலும் இவரின் ஒட்டு மொத்த சொத்துக்களின் மதிப்பு $6,00,000 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்வப்னிஸ் திடீரென்று தனக்கு பாலியல் மாற்றம் ஏற்பட்டு பெண்ணாக மாறியுள்ளதாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவரின் பெயரை சாயிசா என்றும் மாற்றியுள்ளார். இதனைத்தொடர்ந்து பெண்ணாக மாறி அழகிய தோற்றத்தில் இருக்கும் தன் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
மேலும் அதில் நான் சிறுவயதில் அதிகமாக தனிமையைத் தான் உணர்ந்துள்ளேன். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் நான் வித்தியாசமாக இருந்ததால் சிறுவர்கள் என்னை துன்புறுத்துவார்கள் அதனால் ஏற்பட்ட மனவலி மிகவும் வேதனையை தந்தது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது நான் யார் என்பதை இந்த உலகத்திற்கு தெரிவித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இவரின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.