இந்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்க மறுத்து ட்விட்டர் நிறுவனம் முரண்டு பிடித்து வருகின்றது.
மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்காமல் ட்விட்டர் நிறுவனம் அடம்பிடித்து வருகின்றது. உத்திரபிரதேசத்தில் ஏற்கனவே காஷ்மீர் லடாக் ஆகிய பகுதிகள் இந்தியாவுக்கு வெளியே இருப்பது போன்று சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட காரணத்தினால் ட்விட்டர் நிறுவனம் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்ப.ட்டிருந்த நிலையில், தற்போது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அது என்னவென்றால் சிறார்களின் ஆபாச படம் பதிவிடப்படுவதாக மேலும் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது. சட்டப்பாதுகாப்பு அந்தஸ்தை இழந்த பிறகு ட்விட்டர் நிறுவனம் மீது பதியப்படும் நான்காவது வழக்கு இதுவாகும். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் பிரிவினர் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்காமல், இதுபோன்ற வழக்குகளில் ட்விட்டர் நிறுவனம் சிக்கி வருகின்றது.