ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீநிதி. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது தோழியான நடிகை நட்சத்திராவின் திருமணம் தொடர்பாக ஸ்ரீநிதி சில விஷயங்களைப் பேசி வீடியோ வெளியிட்டார் . மேலும் நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படம் குறித்தும், சிம்பு தொடர்பாகவும் சில சர்ச்சையான கருத்துக்களைப் பேசியும் வீடியோ வெளியிட்டார்.
அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் சென்னை புறநகரான புழல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிகிச்சை மையத்தில் ஸ்ரீநிதியைக் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.