Categories
தேசிய செய்திகள்

பிரபல சாக்லேட்க்கு தடை….. உலக அளவில் விற்பனை நிறுத்தம்….. பரபரப்பு காரணம்….!!!!

உலகம் முழுவதும் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் சாக்லேட்டுகளில் ஒன்று Kinder Joy Surprise.  இந்தப் சாக்லேட்டை சாப்பிடும் குழந்தைகளுக்கு குடற் காய்ச்சல் நோய் உருவாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த சாக்லேட் சாப்பிட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குடற்காய்ச்சல் நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து Kinder Joy Surprise சாக்லேட்டை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் பெல்ஜியம் நாட்டின் உணவு பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது.

அங்கு செயல்பட்டுவரும் தொழிற்சாலையை இழுத்து மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பெரேரோ குழுமம் Kinder Joy Surprise சாக்லேட்டை வெளிநாட்டு சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது. மேலும் விற்பனை செய்யப்படும் கிண்டர் ஜாய் சர்ப்ரைஸ் சாக்லேட்டில் குடற்காய்ச்சல் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் கிண்டர் ஜாய் சாக்லேட்டுகள் திரும்ப பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய அதிகாரி இந்தியாவில் விற்பனையாகும் சாக்லேட்டுகள் புனாவில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.  மேலும் Kinder Joy சாக்லேட்டுக்கும், Kinder Joy Surprise சாக்லேட்டுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. இந்தியாவில் இந்த சாக்லேட் திரும்பப் பெறப்படாது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |