Categories
தேசிய செய்திகள்

பிரபல சாமியார் மர்ம மரணம்….. சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சீடர்கள் வழக்கு…!!!

சாமியார் நரேந்திர கிரி மரணம் குறித்து சிபிஐ விசாரணை கேட்டு அலகாபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளதது.

இந்தியாவின் மிகப் பெரிய துறவி அமைப்பின் தலைவராக மகந்த் நரேந்திர கிரி இருந்தார். இவர்  நேற்று மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மகேந்திரகிரி தங்கியிருந்த மடத்தை போலீசார் ஆய்வு செய்தபோது அவர்களுக்கு ஒரு கடிதம் சிக்கியது.

அந்த கடிதத்தில் நரேந்திர கிரி தான் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் எழுதி இருந்தார். பின்னர் நரேந்திர கிரி மரணம் தொடர்பாக போலீசார் அவரது சீடர்களான ஆனந்தகிரி, சந்திப் திவாரி, அதையா திவாரி, ஆகிய மூன்று பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஆனந்தகிரி என்பவர் நரேந்திரகிரிக்கி மிகவும் நெருக்கமான சீடர் எனவும் அவர் நிதி முறைகேட்டில் மடத்தை விட்டு வெளியேற்றப்பட்டார் எனவும் தெரியவந்துள்ளது. எனவே நரேந்திரகிரி மரணத்தை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி சீடர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில் நரேந்திர கிரி ஆன்மிக பணிக்காக தன்னை அர்ப்பணித்தவர் எனவும் அவரது மரணம் மிகவும் வருத்தத்தை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |