உலகின் மிகப்பெரிய நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் தலைவர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவின் ஸ்மார்ட்போன் மற்றும் மெமரி சிப் போன்றவற்றின் தயாரிப்பு நிறுவனம் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ். இந்நிறுவனத்தின் தலைவர் lee-jae yong, சாம்சங் குழுமத்தின் மூன்றாவது தலைமுறையின் தலைவர் ஆவார். இவரின் தந்தை lee kun hee யின் மரணத்திற்குப் பிறகு lee தலைவராக பதவி வகித்துவந்துள்ளார். இந்நிலையில் இந்நிறுவனத்தின் பொறுப்பில் இரண்டு இணை நிறுவனங்கள் இயங்கி வந்துள்ளது. இவ்விரண்டு நிறுவனங்களையும் இணைக்கும் முயற்சியாக முன்னாள் தென் கொரியாவின் அதிபர் park heun hye என்பவரின் நண்பரான choi soon cil என்பவருக்கு லஞ்சம் கொடுத்ததாக கடந்த 2017ம் வருடத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்பு அவரின் தண்டனை காலம் குறைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து செய்யப்பட்ட மேல்முறையீட்டின் அடிப்படையில் தண்டனை இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கானது சியோல் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அதில் இவருக்கு இரண்டரை வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பானது தற்போது உலகம் முழுவதும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இதனால் சாம்சங் நிறுவனம் அதன் முக்கிய முடிவெடுப்பாளரை தற்காலிகமாக இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.