Categories
பல்சுவை

“பிரபல சாம்சங் நிறுவனம்” ரயில்வே நிலையத்தில் செய்த வேற லெவல் காரியம்…. அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா….?

சுவிட்சர்லாந்தில் பிரபல சாம்சங் நிறுவனம் ரயில்வே நிலையத்தில் ஒரு பெல் போர்டு வைத்துள்ளனர். இந்த பெல் போர்டை 60 நிமிடங்கள் பார்ப்பவர்களுக்கு இலவசமாக சாம்சங் போன் கிடைக்கும் என கூறினர். ஆனால் அந்த பெல் போர்டை 60 நிமிடங்கள் பார்ப்பது அவ்வளவு சுலபம் கிடையாது.

அதாவது அந்த‌‌ பெல் போர்டை பார்க்கும்போது சாம்சங் நிறுவனத்தினர் கிட்டார் வாசிப்பது, ஒரு போலியான கணவன் மனைவியை சண்டை போட வைத்தல், பைக் ஸ்டன்ட், நாய்களை குரைக்க வைத்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்களை செய்து பெல்‌ போர்டு பார்ப்பவர்களின் கவனத்தை திசை திருப்பியுள்ளனர்.

அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டாலும் 13 பேர் மட்டும் வெற்றி பெற்று சாம்சங் போனை வாங்கிச் சென்றுள்ளனர். இந்த போட்டியை சாம்சங் நிறுவனம் விளம்பரத்திற்காக செய்துள்ளது. மேலும் கவனத்தை சிதறவிடாமல் ஒரு காரியத்தை செய்தால் அதில் வெற்றி கிடைக்கும் என்பது இதை பார்க்கும் போது தெரிகிறது.

Categories

Tech |