தமிழ் திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகை சந்திரா லக்ஷ்மன் (38), அவரது சக நடிகர் டோஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் தமிழில் மனச் செல்வம், ஏப்ரல் மாதத்தில் மற்றும் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ள இவர் தமிழில் கோலங்கள், காதலிக்க நேரமில்லை, வசந்தம், மகள், துளசி, சொந்த பந்தம் மற்றும் பாசமலர் போன்ற தொடர்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் சீரியலில் உடன் நடிக்கும் சக நடிகர் டோஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்துகொண்டு உள்ளதாக அறிவித்துள்ளார். தொடரில் நடித்து வரும் போது இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்துள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக வரும் நிலையில் பலரும் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.