சின்னத்திரை நடிகை வாணி போஜனின் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகை வாணி போஜன் சின்னத்திரை நடிகை ஆவார். பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். நடிகை வாணி போஜன் சத்தியா சீரியலில் மூலமாக மிக பிரபலமானவர். இதைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ என்ற படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது இவர் நடித்து வரும் புதிய படத்தில் மெஹந்தி சர்க்கஸ், பெண்குயின் ஆகிய படங்களில் பிரபலமான மதம்பட்டி ரங்கராஜ் இருவரும் இணைந்து திரில்ர் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ‘கோசிகா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் மார்க் ஜோயல் இப்படத்தை இயக்குகிறார். இப்படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரோடக்சன் காண பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகளை வாணி போஜன் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு விக்னேஷ் ஜே.கே ஒளிப்பதிவு செய்து ஸ்டான்லி சேவியர் இசையமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.