சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது தற்கொலையில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரது கணவர் ஹேம்நாத் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவன் ஹேம்நாத் தாக்கல் செய்த மனு தொடர்பாக நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அதன்படி சித்திர விவகாரத்தில் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி இருந்த ஹேம்நாத், தற்போது இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவிற்கு சித்ராவின் தந்தை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.