சின்னத்திரை நடிகையான ரித்திகா தமிழ் செல்வி விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ரித்திகாவும் விஜய் டிவியின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் வினுவும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில், சென்ற நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் ஹினிமூனுக்காக ரித்திகா கணவர் உடன் மாலத்தீவுக்கு சென்று விட்டார்.
இதனால் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ரித்திகா விலகிவிட்டார் எனவும் இனி அந்த கதாபாத்திரத்தில் வேறு நடிகை தான் நடிப்பார் எனவும் தகவல் வெளியாகியது. இந்த நிலையில் ஹினிமூனை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியுள்ள ரித்திகா பாக்கியலட்சுமி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அத்துடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இதனை உறுதிசெய்து உள்ளார். இவ்வாறு ரித்திகா மீண்டும் சீரியலில் இணைந்திருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.