தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகை ப்ரீத்தி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்று தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமானார். அதன் பிறகு கேளடி கண்மணி, வள்ளி, லட்சுமி கல்யாணம், தெய்வம் தந்த வீடு, வானத்தைப்போல, கோபுரங்கள் சாய்வதில்லை போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ப்ரீத்தி நடிகர் கிஷோரை காதலிக்கிறார். கடந்த 2009-ம் ஆண்டு வெளியான பசங்க படத்தில் நடிகர் கிஷோர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் விருதும் கிஷோருக்கு கிடைத்தது. இந்நிலையில் நடிகர் கிஷோர் ப்ரீத்தியை காதலிப்பதை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து உறுதி செய்துள்ளார். மேலும் நடிகர் கிஷோர் தன்னுடைய காதலியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகர் கிஷோர் மற்றும் நடிகை ப்ரீத்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram