சன் தொலைக்காட்சியில் ஹிட்டான சீரியல்களில் ஒன்று மெட்டிஒலி. 2002ஆம் ஆண்டு இயக்குனர் திருமுருகன் இயக்கி நடித்து ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் மிக பெரிய அளவில் பேசப்பட்டது . இதனையடுத்து கொரோனா காலத்தில் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 2002ல் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு கொடுத்த வரவேற்பை இப்போதும் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.
அந்த அளவிற்கு ரசிகர்களிடையே இந்த சீரியல் பிரபலமானது. இந்நிலையில் இந்த சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்த உமா மகேஸ்வரி உடல்நலகுறைவால் திடீரென உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.