Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் நடிகை ரித்திகாவுக்கு…. இன்று டும் டும் டும்… வெளியான போட்டோ…!!!!

பிரபல சீரியல் நடிகை ரித்திகாவுக்கு இன்று திருமணம் முடிந்துள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இளம் நடிகை ரித்திகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வினு என்பவருடன் இன்று ரித்திகாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

Categories

Tech |