பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விரைவில் முடிவுக்கு வருவதாக சமூக வலைதளப் பக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களும் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படி வெற்றிப்பயணத்தில் உள்ள தொடர்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் குடும்பபாங்கானது என்பதால் மக்களின் ஆதரவுடன் படுஹிட்டாக ஒளிபரப்பாகிறது.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஐஸ்வர்யாவின் திருமணத்துடன் முடிவுக்கு வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுக்குறித்து இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் மீனாவாக நடிக்கும் ஹேமாவிடம் சீரியல் முடிவடைகிறதா என கேட்டுள்ளார். அதற்கு ஹேமா “இதுக்குறித்து எங்கள் குழு எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆகவே இல்லை” என பதில் கூறியுள்ளார்.