Categories
சற்றுமுன் சினிமா

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் மருத்துவமனையில் அனுமதி…. பெரும் சோகம்….!!!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானை பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மராட்டிய மாநிலம்,  ராய்கட் மாவட்டத்தில் பன்வேல் பகுதியில் சல்மான்கானுக்கு சொந்தமாக ஒரு பண்ணை வீடு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் மற்றும் சல்மான்கானின் பிறந்த நாளுக்கு அவரது குடும்பத்தினர் அந்த பண்ணை வீட்டில் உற்சாகமாகக் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று அந்த பண்ணை வீட்டில் வைத்து சல்மான்கானை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக கமோதேவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

உரிய பரிசோதனைகளுக்குப் பிறகு இன்று காலை சல்மான் கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதகாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சல்மான் கான் நாளை தனது 56 ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

Categories

Tech |