பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு மட்டுமல்ல சின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளும், செய்தி வாசிப்பாளர்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணி சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருப்பவர். இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மேலும் அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் கண்மணி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் கண்மணிக்கு திருமணமா ?, எப்போது திருமணம்?, மாப்பிள்ளை யார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.