நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள மண்டேலா திரைப்படம் பிரபல சேனலில் வெளியாக இருப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் ரஜினி, விஜய், அஜித் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தியுள்ளார் . மேலும் இவர் சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மண்டேலா. அறிமுக இயக்குனர் மதோனி அஸ்வின் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் .
Here’s the trailer of #Mandela!
Relevant content at the right time 🙂https://t.co/16791GYIBa
World premiere on @vijaytelevision on Apr 4th, 9.30am.Best wishes to the team 🙂@iYogiBabu @madonneashwin @sash041075 @directormbalaji @chakdyn @Shibasishsarkar #MandelaTrailer
— A.R.Murugadoss (@ARMurugadoss) March 25, 2021
இந்த படத்தில் யோகி பாபு உடன் இணைந்து ஷீலா ராஜ்குமார், ஜிஎம் சுந்தர், சங்கிலி முருகன், கண்ணா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் மண்டேலா படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அதில் ‘விஜய் தொலைக்காட்சியில் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி காலை 9:30 மணிக்கு மண்டேலா திரைப்படம் ஒளிபரப்பாகும்’ என அறிவித்துள்ளார் .