Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரபல டிவி சீரியலின்…. துணை நடிகர் வெட்டிக்கொலை…. சென்னையில் அதிர்ச்சி…!!

பிரபல தொலைக்காட்சியின் துணை நடிகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் “தேன்மொழி பி.ஏ ஊராட்சி மன்ற தலைவி” சீரியலில் தொகுப்பாளினி ஜாக்லின் நடிகையாக நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக சித்தார்த் நடித்துள்ளார். மேலும் துணை நடிகராக செல்வரத்தினம்(45) என்பவர் நடித்து வந்துள்ளார். இவர் எம்ஜிஆர் நகரில் உள்ள வள்ளல் பாரி தெருவில் வசித்து வந்துள்ளார். இலங்கை தமிழரான இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் ஆட்டோவில் வந்த 4 மர்ம நபர் கொண்ட கும்பல் செல்வரத்தினத்தை அவருடைய வீட்டு வாசலில் வைத்து சரமாரியாக வெட்டி உள்ளது. இதில் படுகாயமடைந்த செல்வரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் அந்த கும்பல் பக்கத்தில் இருந்த சிசிடிவி கேமராவையும் உடைத்துவிட்டு தப்பி ஓடி உள்ளது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று செல்வரத்தினத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொழில் பிரச்சினை காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல தொலைக்காட்சியின் துணை நடிகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |