பிரபல சின்னத்திரை நடிகர் தீர்த்தநாத் ராவ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி கபில் சர்மா என்ற டிவி நிகழ்ச்சியின் மூலம் காமெடி செய்து பிரபலமானவர் தீர்தானந்த் ராவ். இவர் கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி தன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு
முயன்றிருக்கிறார்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தற்கொலை முயற்சி பற்றி தீர்தானந்த் ராவ் கூறியதாவது,”ஆமாம், விஷம் குடித்தேன். எனக்கு பண பிரச்சனையாக இருக்கிறது. என் குடும்பத்தாரின் ஆதரவும் இல்லை. இதை விட மோசமானது வேறு எது?
எனக்கு ஒரு மகள் இருக்கிறார். அவருடன் தொடர்பில் இல்லை. வேலை இல்லாமல் வீட்டில் போர் அடிக்கிறது.” என்றார். தீர்த்தநாத் டிவி நிகழ்ச்சி தவிர்த்து படங்களிலும் நடித்திருக்கிறார். அவர் பிரபல பாலிவுட் நடிகரான நானா படேகர் போன்று இருப்பதாக அனைவராலும் பேசப்பட்டார். மேலும் இவர் நானா படேகர் போன்று மிமிக்ரி செய்தும் சம்பாதித்திருக்கிறார்.