பிரபல கொரியர் நிறுவனமான DHLக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று கோஸ்டா ரிக்காவின் ஜுவான் சாண்டோ மரியா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கவின் கௌத்தமாலாவிற்கு புறப்பட்டு சென்ற போது சுமார் 100கிமீ உயரத்தில் விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக விமான நிலையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது.
ஓடு தளத்தில் இறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி இரண்டாகப் பிளந்தது. இது விமான நிலையம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து விபத்து காரணமாக அந்த விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 32 விமானங்கள் மாற்று பாதை வழியாக சுற்றி விடப்பட்டன.