டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜராகி வரும் நிலையில் அதனைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்தது. கரூர் எம்பி ஜோதிமணி சட்டத்துக்கு விரோதமாக எனது உடைகளைத் கிழித்து இராணுவத்தின் உதவியோடு தன்னைக் கைது செய்து டெல்லி போலீஸ் ஒரு மணி நேரமாக எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று தெரியவில்லை என்று பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இது குறித்து சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளேன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிரதமர் மோடியின் ஆட்சியில் இதுதான் நிலை என்றால் சாதாரண பெண்களுக்கு, எதிர்க்கட்சியை சேர்ந்த பிறகு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.