பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் தாயார் வள்ளியம்மை காலமானார்.
2007-இல் அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய் . அதன் பிறகு மதராசப்பட்டினம்’, ‘தலைவா’, ‘தெய்வத்திருமகள்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். இவரது தந்தை தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன். இவரின் தயார் வள்ளியம்மை கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.