Categories
சினிமா

பிரபல தமிழ் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ்…. சாதிமறுப்பு திருமணம்….!!!

’கூழாங்கல்’  திரைப்பட இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் தனது தோழியும் காதலியுமான அறிவுநிலா என்பவரை மணந்துள்ளார். இயக்குநர் ராம் முன்னிலையில் கோவையில் அறிவுநிலாவை சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டுள்ளார் வினோத்ராஜ். பெண் வீட்டார் தரப்பில் இந்தத் திருமணத்து எதிர்ப்பு இருந்துவரும் நிலையில் கோவையில் மிக எளிமையாக நண்பர்கள் முன்னிலையில் பதிவுத்திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் தயாரிப்பில் கடந்த பிப்ரவரியில் வெளியான திரைப்படம் கூழாங்கல். சர்வதேச அளவில் பல திரைப்பட விழாக்களுக்கு அந்தப் படம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. போலாந்து, டொரோண்டோ, சின்சினாட்டி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு இந்தப்படம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. மணமக்களுக்கு விக்கி மற்றும் நயன்தாரா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |