தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நகைச்சுவை நடிகர் பெஞ்சமினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் பெஞ்சமினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் வெற்றி கொடி கட்டு மற்றும் திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். இதனையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காததால் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் மருத்துவ உதவி கேட்டு அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.