சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த உமா மகேஸ்வரி இன்று காலை காலமானார். இது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே மஞ்சள் காமாலை நோய் இருந்துள்ளது. அதற்காக மருத்துவமனையில் முறையான சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். சிகிச்சைக்கு பிறகும் அவரது உடல்நிலை மோசமாக இருந்துள்ளது. அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவு சின்னத்திரை உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Categories