தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டு புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் விஜய்சேதுபதி. மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்போடு கொண்டாடப்படும் இவர் இளைய தளபதி விஜயுடன் நடித்த மாஸ்டர் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதில் விஜய் அளவிற்கு மிகவும் பெருமையாக பேசப்பட்டு வரும் விஜய் சேதுபதி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக செய்திகளும், புகைப்படங்களும் பரவி வருகின்றது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அதில், அவர் வால் போன்ற ஆயுதங்களால் கேக் வெட்டும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இது போன்ற ஆயுதங்களால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுபவர்களை போலீசார் கைது செய்து, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருவதால் நடிகர் விஜய் சேதுபதி மீதும் நடவடிக்கை பாயுமோ என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.