தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான போண்டாமணி சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நடிகர் நடிகைகள் யாராவது உதவவும் முன் வர வேண்டும் எனவும் கூறி நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டார்.இதனை தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள போண்டாமணியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சந்தித்து அவரின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என உறுதி அளித்துச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு உதவுவதாக அறிவித்துள்ளனர்.இந்நிலையில் உடல்நலம் பாதித்த போண்டாமணிக்கு உதவுவது போல நடித்து ஒரு லட்சத்தை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அவரிடம் சென்னையை சேர்ந்த ராஜேஷ் பிரித்தீவ் என்பவர் உதவுவது போல் பழகி வந்துள்ளார்.
அப்போது அவரின் மனைவியிடம் தான் மருந்துகள் வாங்கி வருவதாக ஏடிஎம் கார்டை வாங்கியுள்ளார்.அப்போது ராஜேஷ் நகைக்கடையில் அந்த காடு மூலம் நகைகள் வாங்கியது விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.