Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகருக்கு மாரடைப்பு…. ரசிகர்கள் பெரும் சோகம்….!!!!

தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் சீனிவாசன். இவர் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். தற்போது பெயரிடாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்ததால் படக்குழுவினர் அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக பவர் ஸ்டார் சீனிவாசன் மயக்கமடைந்த கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் அவரை தீவிரமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |