லத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்கு காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் புதிய திரைப்படம் லத்தி.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நூறு ரவுடிகள் சேர்ந்து விஷாலை தாக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது, அவருக்கு நிஜமாகவே காலில் பலத்தை அடிபட்டது. இதையடுத்து அவர் கீழே விழுந்து துடிதுடித்தார். அவரால் மீண்டும் எழுந்து நிற்க முடியாத நிலையில் உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.